Posts

Showing posts from September, 2022

கவிதை எனும் பெயரில்..

கவிதை எழுத காகிதம் தேடி கலைத்துப் போனேன், நீ வரும் வரையில்...  இசை கேட்டு இரவைக் கழித்தேன்,  நீ வரும் வரையில்..  நகப்பூச்சைத் தவிர்த்து இயல்பாய்  இருந்தேன், நீ வரும் வரையில்... என்னில் தடம் பதிய உடையணிந்தேன், நீ வரும் வரையில்... உறக்கம் தொலைந்து குளிரில் நடுங்கினேன், நீ வரும் வரையில்...   ம்ம்ம்...  எதிர்காலத்தில் வாழப் பழகிக் கொண்டிருந்தேன், நீ வரும் வரையில்...  நீ வந்தாய்,, என்னை நானே தேடுகிறேன்...